[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

அம்மா ஸ்கூட்டர் அட்ராசிட்டீஸ்

amma-two-wheeler-scheme-issues

தமிழக அரசின் சார்பில் வழங்கபபட உள்ள  அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் எப்படியாவது ஒரு பைக்க வாங்கி போட்டுடணும்னு பொண்ணுங்க இப்பவும் கூட ஆர்டிஓ ஆபிசிலயும், நகராட்சி அலுவலகங்களிலும் காத்துக் கிடக்கிறாங்க. சனிக்கிழமை வரை அவகாசம் இருக்கதால அப்ளை பண்ணாம விட்ட இன்னும் பலர் நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்னு அப்ளிகேஷன் எங்கலாம் கிடைக்குமோ அங்கெல்லாம் படையெடுக்குறாங்க.

 
இது ஒருபக்க இருக்க, அப்ளிகேஷனுக்கு காசு வாங்க கூடாதுனு தமிழக அரசு சொல்லிருக்கு. ஆனா கன்னியாகுமரில அப்ளிகேஷன் ஒண்ணுக்கு 250 ரூபாய் வாங்கிட்டாங்கனு பொண்ணுங்க எல்லாம் கம்ப்ளைண்டு ஆனா ஒரு ஆக்‌ஷனும் இல்லை. வெறென்ன பண்றது வழக்கம் போல காசு கொடுத்து அப்ளை பண்ணுனோம்னு ஒரே புலம்பல்..

இது ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு விஷயம் தெரியுமா ? அம்மா ஸ்கூட்டர் திட்டத்துக்கு அப்ளை பண்ணிட்டு வீட்டுக்கு வந்திருக்காங்க சுகன்யா . போருர்ல இருக்காங்களாம். அவங்க வீடு வந்து சேர்றதுக்குல்ல , வெரிபிகேஷன் ஆபிசர் எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க. என்னடா இவ்வளவு வேகமா வேலை செய்யிறாங்களானு பாத்தா, அவங்களுக்கு கொடுத்திருக்க டெட்லைன் அப்படி. அவகாசம் முடியிற 10-ம் தேதிக்குள்ள முதல் கட்ட லிஸ்டோட வெரிபிகேஷன் முடிக்கணும்னு சொன்னதால இந்த அவசரம்.

 
இப்படி போய்கிட்டு இருக்கப்போ, மன்னார்குடில டீச்சரா வேலை பாக்குறவங்க இந்துமதி. அவங்க வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு தினமும் பஸ்ல போறதால லேட் ஆயிடுதுனு அம்மா ஸ்கூட்டருக்கு அப்ளை பண்ணிட்டு வந்துருக்காங்க . அவங்களோட சொந்த ஊரு திருத்துறைப்பூண்டி, வேலை கிடைச்சதலா மன்னார்குடில வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தோட தங்கியிருக்காங்க. அப்ளை பண்ண அடுத்த நாள் வீட்டுக்கு வெரிபிகேஷன் பண்றதுக்கு வந்திருக்காங்க ஆபிசர்ஸ்.  அவங்களோட ஆதார் கேட்டிருக்காங்க, கொடுத்திருக்காங்க. என்னம்மா அட்ரஸ்ல திருத்துறைபூண்டினு இருக்கு , உனக்கெல்லாம் ஸ்கூட்டர் தர முடியாதுனு ஸ்பாட் ரிஜக்‌ஷன் போட்டுட்டு பறந்துட்டாங்கலாம்.

இப்படி போய்கிட்டு இருக்கு அம்மா ஸ்கூட்டர் திட்டம். இதுக்கு இடையிலதான் நம்ம பொண்ணுங்க எல்லாம் பொறுப்பா, ஆர்டிஓ ஆபிஸ் போய் லைசன்ஸ் வாங்குற வேலைய பாக்குதுங்க. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close