[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

’ஒரு கதை சொல்லட்டா சார்! விஜய் சேதுபதி பர்த் டே ஸ்பெஷல்!

vijay-sethupathi-s-birthday-special

நட்சத்திர ஓட்டல் அது. ஓடி வரும் ரசிகர்கள் கூட்டம், வாசலில் அந்த ஹீரோவை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கிறது. ஒரே ஒரு சிறுவன் மட்டும் தயங்கி நிற்கிறான். அவனுக்கும் புகைப்படம் எடுக்க ஆர்வம். கூட்டத்துக்குள் நுழைய முடியவில்லை. கூட்டம் இப்போது விலகுகிறது. அவசரமாகப் போக வேண்டிய அந்த ஹீரோ, அந்தச் சிறுவனை பார்க்கிறார். அழைக்கிறார். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அவன், ‘எனக்கு இன்னைக்குப் பர்த் டே. இந்தாங்க சாக்லேட்’ என்கிறான். 
அவனைக் கட்டியணைத்து வாழ்த்திவிட்டு அதை அவனிடமே கொடுக்கிறார் ஹீரோ. மகிழ்ச்சிப் பொங்க பாதியைக் கடிக்கிறான் சிறுவன். அவனிடம் இருந்த மீதி எச்சில் சாக்லேட்டை, பிடுங்கி சாப்பிடும் ஹீரோ, பிறகு அங்கிருந்து நகர்கிறார் தனது காருக்கு. சிறுவனும் அவனுடன் இருந்தவர்களும் வியக்கிறார்கள். 

அந்த ஹீரோ, இன்று பிறந்த நாள் காணும் விஜய் சேதுபதி!

சினிமாவில் நாம் பார்க்கும் சில ஹீரோக்களின் நிஜமுகம் வேறாகத்தான் இருக்கிறது. அதில் சிலர் விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராக, விஜய் சேதுபதியை கைகாட்டுகிறார்கள் தமிழ் சினிமாவில்!

’சினிமாவுல பல நடிகர்களை பார்த்திருக்கோம். ஆனா, சில பேர் மட்டும்தான் தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருப்பாங்க. அதோட, எந்தவித பந்தாவும் இல்லாம இருக்கிறவங்களும் குறைவுதான். விஜய் சேதுபதி செட்டுக்கு வந்தா, சாதாரண லைட்மேன் வரை எல்லார்ட்டயும்
சகஜமா பேசி பழகுவார். எல்லாரையும் லைவா வச்சிருப்பார். அவர் அடிமட்டத்துல இருந்து வந்ததால இப்படி இருக்கலாம்னு நினைக்கிறேன். அவரை புகழணும்ங்கறதுக்காக இதை சொல்லலை. தமிழ் இன்டஸ்ட்ரியில நீங்க யார்ட்ட வேணுன்னாலும் இதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்’ என்கிறார் சீனியர் மானேஜர் ஒருவர்.

உண்மைதான். 2013-ல் சைமா விருது விழா, துபாயில். மேடையேறிய விஜய் சேதுபதி, ‘பத்து வருஷத்துக்கு முன்னால இதே துபாய்ல அக்கவுன்டன்டா வேலை செஞ்சுட்டிருந்தேன். நான் இப்படியொரு நடிகனா ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை. இன்னைக்கு இதே துபாய்ல
ஒரு நடிகனா, விருது வாங்குறது எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு. வாழ்க்கை புதிர்தான்’ என்றார்.

‘ஒரு படத்தோட ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. ’செட்’ல வேலை பார்த்துட்டிருந்த ஒருத்தர், அவர் மகளுக்கு கல்யாணம்னு பத்திரிகை கொடுத்தார். என்னைக்குன்னு கேட்டுக்கிட்டார் விஜய் சேதுபதி. எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சும்மா கேட்டு வச்சிருக்கிறார் போலன்னு
நினைச்சுக்கிட்டோம். சரியா அந்த கல்யாண நாள் அன்னைக்கு ஷூட்டிங்கை, 5 மணிக்கே முடிச்சுட்டு, செங்கல்பட்டு பக்கத்துல அந்தக் கல்யாணம் நடந்தது. நேரா கிளம்பிட்டார். இந்த மாதிரி எல்லாரையும் சஜமாக பார்க்கிற ஹீரோ விஜய் சேதுபதி. சினிமாவுல வளர்ந்த பிறகு
ஒரு ஹீரோ இப்படி எளிமையா இருக்கிறது பாராட்டப்பட வேண்டிய விஷயம்’ என்கிறார் டெக்னீஷியன் ஒருவர். 

’ஒரு கதையில் அந்த கேரக்டரை தன்னால் சிறப்பா பண்ண முடியும்னா மட்டும்தான் ஒப்புக்கொள்றார் விஜய் சேதுபதி. அது சென்னை வழக்கு கதைன்னா, வசனங்களைப் பேசிப்பார்க்கிறார். தன்னைக் கதைக்குள் ஓடவிடுறார். அது பொருந்தும் அப்படின்னா நடிக்க சம்மதிக்கிறார். எந்த வசனமா இருந்தாலும் தனது ஸ்டைலுக்கு அதை மாற்றுறார். அல்லது இப்படி இருந்தா நல்லாருக்குமே என்று இயக்குனர்ட்ட சொல்றார். இதனால்தான் படங்கள்ல அவர் கேரக்டர் உயிரோட்டமா இருக்குது’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

சத்தம் போடாமல் உதவுவதை வேலையாகவே செய்துவருகிறார் விஜய்சேதுபதி. ‘சினிமாவுல நடிகனா ஆகறதுக்கு முன்னால எங்கப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஒரு ஆபரேசன். ஒரு லட்சம் ரூபா வேணும். பணக்கார நண்பர்கள் நிறைய பேர் இருந்தாங்க.
ஆனா, யாரும் தர முன்வரலை. கஷ்டப்பட்ட ஒரு நண்பன்தான் அந்தப் பணத்தை அங்க இங்கன்னு வாங்கிக் கொடுத்தான். அதனாலதான் நானும் அந்த உதவியை பண்றேன்’ என்று காரணம் சொல்கிறார் அவர். 

’ஒரு நடிகனா சில கேரக்டர் பண்ணிட்டு போகலாங்கறதுதான் என் ஆசை. ஆனா, நான் ஹீரோவா ஆனது, இந்த உயரத்துக்கு வந்தது எல்லாமே எதிர்பாராததுதான்’ என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

’வர்லாம் வா’ என்று அழைக்க ரசிகர்கள் இருக்கும்போது நீங்கள் இன்னும் தொடலாம் உயரம்! 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close