[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

வாட்ஸ்ஆப்பில் டிப்ஸ் கேட்டு ரயிலில் பிரசவம்

medico-used-whatsapp-to-help-woman-give-birth-to-baby-in-express-train

வாட்ஸ்ஆப் மூலம் மருத்துவர்களிடம் டிப்ஸ் கேட்டு இளம் மருத்துவ மாணவர் ஒருவர், ரயிலில் பிரசவம் பார்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

அகமதாபாத் - பூரி விரைவு ரயிலில் சென்ற 24 வயதான கர்ப்பிணிக்கு‌த் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர் விபின் காட்ஸே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு தெரிந்த மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டு அதன்படி பிரசவம் பார்த்தார். இதன் பிறகு அந்தப் பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையை கையில் ஏந்தியவாறு எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் அந்த மாணவர் வெளியிட்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement:
Related Tags : Medico train baby deliveryahmedabad baby delivery medico train
Advertisement:
Advertisement:
[X] Close