[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்
  • BREAKING-NEWS இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்?- ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் தோல்வியடைந்துள்ளன - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை- கமல்ஹாசன்

நீர்புகா ஆடைகளை உருவாக்கிய மெக்கின்டோஷுக்கு கூகுளின் கவுரவம்

google-doodle-celebrates-250th-birthday-of-charles-macintosh

நீர்புகா ஆடைகளை உருவாக்கிய ஸ்காட்லாந்து அறிவியலாளர் சார்லஸ் மெக்கின்டோஷின் 250ஆவது பிறந்தநாளை டூடுள் மூலம் கூகுள் சிறப்பித்துள்ளது.

மழை நாட்களில் வெளியே செல்ல சிறுவர் முதல் பெரியவர் வரை நீர் புகாத ரெயின் கோட் அணிவது வழக்கம். ரெயின்கோட் எனப்படும் நீர்புகா ஆடைகளை முதன்முதலில் உருவாக்கி, வணிகரீதியிலான உற்பத்தியையும் தொடங்கியவர் சார்லஸ் மெக்கின்டோஷ் என்ற வேதியியலாளர். சார்லஸ் மெக்கின்டோஷின் 250 வது பிறந்த நாளான இன்று, அவரை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுலில் அவரது அனிமேஷன் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.

எப்படி உருவாக்கினார்..?

இளம் வயதில் பலரும் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், மெக்கின்டோஷ் வேதியியல் ஆய்வுகளில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். அப்போது, நாப்தா எனப்படும் தாரின் உபபொருளானது, ரப்பரில் எளிதில் கரைவதை அவர் கண்டுபிடித்தார். பசை போன்ற இந்த புதிய கலவை தண்ணீரை விலக்கும் குணம் பெற்றிருந்ததையும் மெக்கின்டோஷ் கண்டறிந்தார். ரெயின்கோட் உள்ளிட்ட தண்ணீரை விலக்கும் ஆடைகளைத் தயாரிப்பதில் இந்த ஆய்வு பெரிதும் உதவியது. இந்த கலவையை துணிகளுக்கு மேல் வைத்து தைத்து முதல் நீர்புகா ஆடையை அவர் வடிவமைத்தார். இதற்காக அவருக்கு 1823ம் ஆண்டில் காப்புரிமை கிடைத்தது. வணிகரீதியில் தண்னீர்புகா ஆடைகளைத் தயாரித்த மெக்கின்டோஷ், 1843ம் ஆண்டு மறைந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close