[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

குளிர் காலமும் தேக பராமரிப்பும்...!

winter-season-beauty-tips

குளிர் காலம் தொடங்கியவுடன் பலருக்கு சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடுக்கம் வந்துவிடும். என்ன தான் எண்ணெய் சருமம் உள்ளவர்களாக இருந்தாலும் கூட தோல் வறட்சி அடைந்துவிடும். இதற்கு வீட்டிலிருந்த படியே கீழ்க்கண்ட சில எளிமையான அழகு குறிப்புகளை பயன்படுத்தி நமது சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்..!

* தினமும் குளிக்க போகும் முன் தேங்காய் எண்ணெயை உடலில் நன்றாக தடவி பின்னர் குளிப்பதால் சரும ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம்.
* தக்காளியை அரைத்து சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்வதால் சருமம் வறட்சி அடைவது கட்டுபடுத்தப்படும்.
* குளிர்காலத்தில் குளிருக்கு ஏற்றவாறு சூடான தண்ணீரை பயன்படுத்துவதால் சரும வறட்சி மேலும் அதிகரிக்கும். ஆகையால், வெதுவெதுப்பான தண்ணீரை குளிக்கப் பயன்படுத்துங்கள்.
* சரும வறட்சியை தடுக்க ஒரு சிறந்த வழியென்றால், அது தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதால், சருமம் வறட்சியின்றி மின்னும்.
* குளிர்காலத்தில் குறிப்பாக உதடுகளில் தான் வறட்சி அதிகம் இருக்கும். அப்படி உதடுகளில் வறட்சி ஏற்படாமல் மென்மையாக இருக்க தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டிற்கு சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
* கொத்தமல்லிச் சாறுடன் வெண்ணெய் கலந்து கண்களைச் சுற்றி பூசிவர ஒரே வாரத்தில் கருவளையம் ஓடிப்போகும்.
* இளஞ்சூடான பாலை முகத்தில் தினமும் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வறட்சி தன்மை குறையும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close