[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

உங்க ஏரியாவுல உள்ள ஏ.டி.எம்மில் 2000 ரூபாய் நோட்டு எப்போ வரும்னு தெரிஞ்சுக்கனுமா?!

when-will-getting-the-money-in-atm

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், அதற்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகளை நாடெங்கும் வங்கிகள், தபால் நிலையங்களில் இருந்து மக்கள் பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்த போதிலும் சில இடங்களில் மட்டுமே ஏ.டி.எம். மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கிறது.

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நவம்பர்- 15 ஆம் தேதி முதல் ஏ.டி.எம்.களில் கிடைக்கும் என்று மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர பெரும்பாலான இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிமான ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்நிலையில், ஏ.டி.எம். மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டால் வங்கிகளில் கூட்டம் குறையும்.ஆனால் ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற ஏன் இந்த தாமதம் என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் ஏ.டி.எம். இயந்திரங்களை மறுசீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நாட்டில் உள்ள 22,000 ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஏ.டி.எம்- களும் விரைவில் திருத்தி அமைக்கப்பட்டு பணம் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க டிசம்பர் 30–ஆம் தேதி வரை சேவை கட்டணம் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close