சந்திரயான்-2 விண்கலம் 2 மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயத் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் செல்லவுள்ளனர். அப்பள்ளியில் படிக்கும் முகமது தாஹீர், சந்தோஷ், மணிகண்டன், ஹரிகிருஷ்ணா ஆகிய மாணவர்களே இஸ்ரோ செல்லவுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022 க்குள் நிறைவேற்றப்பட உள்ளது. சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 2 மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!