[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

வாட்ஸ் அப்-பின் இந்திய தலைவர் நியமனம்!

whatsapp-india-head-appointed

வாட்ஸ் அப்-பின் இந்திய தலைவராக, அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்-பை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை அந்நிறுவனம் நியமித்துள்ளது. இவர், பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த வருடத் தொடக்கத்தில் பதவி ஏற்பார்.

வாட்ஸ் அப் மூலம் போலி செய்திகள் பரவுவதால் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக இந்தியா தொடர்ந்து கூறி வந்த நிலையில், இந்த நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close