[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

முடங்கி மீண்டது யூ டியூப்..!

you-tube-is-working-now

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய யூ டியூப் இணையதளம், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியது.

உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் யூடியூப் இணையதளம் இன்று காலை திடீரென முடங்கியது. இதனால் அதனை பயன்படுத்துவோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து யூ டியூப் நிறுவனம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தது. அதில்,  அதில் “யூ டியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூ டியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் யூ டியூப் இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் அதனை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வீடியோக்கள்தான் யூ டியூப்பின் முக்கிய அம்சம். திரைப்பட பாடல்கள், படங்கள் என எந்தவகையான வீடியோக்களையும் யூ டியூப்பில் பார்க்கலாம். தனிநபர்களும் தங்கள் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அதில் தங்களின் வீடியோக்களை பதிவேற்றும் வசதியும் இதில் இருக்கிறது. இதனாலேயே நாள்தோறும் யூ டியூப் இணையதளத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close