[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்? தீர்வு இங்கே!

why-smartphone-hanging-virus-or-apps

தற்போதைய காலக் கட்டத்தில் செல்போன்கள் இல்லாதவர்கள் என கணக்கெடுத்தால் நூற்றுக் கணக்கில் கூட இருக்கமாட்டர்கள். ஏனெனில் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை செல்போன்கள் சென்றுவிட்டது. இளைஞர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. ஸ்மார்ட் போன்களை முக்கியமாக அவர்கள் வாங்குவதற்கு காரணம் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கேமரா, போட்டோ எடிட், கேம்ஸ், உள்ளிட்டவற்றை ஜாலியாக உபயோகப்படுத்ததான். இதையெல்லாம் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போனின் வேகம் என்பது 6 மாதத்திலேயே குறைந்துவிடுகிறது. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆவதால் தலை முடியை பிய்த்துக்கொள்பவர்களை பார்த்திருப்போம்.

இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக வரும் ஒரு பிரச்னை தான். இருப்பினும் அவசரமான நேரத்தில் ஹேங் என்பது உச்சபட்ச எரிச்சலை உண்டாக்கும். இந்த ஹேங்கிங்கு முக்கியக் காரணம், உங்கள் போனில் ஸ்டோர் பண்ணியுள்ள ஆப்ஸ்கள். ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் டேட்டாக்கள் அப்படியே மெமரியில் தேவையற்றவையாக தங்கிவிடுகின்றன. இவற்றை நீங்கள் செட்டிங்க்ஸில் சென்று, அங்கு ஆப் செட்டிங்க்ஸில் சென்று, மேனேஜ் ஆப்ஸில் சென்று டெலிட் செய்ய முடியும். அப்படி செய்தாலும் அவை சில மணி நேரங்களுக்குள் மீண்டும் உங்கள் போனில் வந்து தேங்கிவிடும்.

இந்தப் பிரச்னையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள். அத்துடன் ஸ்மார்ட்போனில் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்ஸ்களை, மேனேஸ் ஆப்ஸில் சென்று கட்டாய நிறுத்தம் ( Force stop) கொடுத்துவிடுங்கள். இதுதவிர மாதத்திற்கு இரண்டு முறை உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு முன்னால் உங்களுக்கு தேவையான ஆப்ஸ்களை பேக்-அப் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். சிலர் ஆப்ஸ்கள் மற்றும் ரேம் கிளியர் போன்ற சாப்ட்ஃவெர்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அதன் மூலம் மேலும் ஸ்மார்ட்போன்கள் ஹேங்கிங் ஆகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. எனவே அதுபோன்ற சாஃப்வெர்களை பதிவிறக்கம் செய்யும்போது, சிறந்தவற்றை தேர்வு செய்யவும்.

சில நேரங்களில் போட்டோக்கள், வீடியோக்கள், பாடல்கள் போன்றவற்றை அதிகமாக செல்போன் மெமரியில் சேமித்து வைப்பதாலும் போன் ஹேங்க் ஆவதுண்டு. எனவே மை ஃபைல்ஸ்-க்குள் சென்று அவ்வப்போது தேவையற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிடுங்கள். இதுதவிர சிலர் செல்போன்கள் வைரஸ் தாக்கி விட்டதால் வேகம் குறைந்துவிட்டதாக கூறுவதுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதுபோன்ற வைரஸ்கள் உங்கள் போன்களை குறைவாகவே பாதிக்கின்றன. 

ஹேக்கர்கள் குறிவைப்பது உங்கள் ஸ்மார்ட்போன் வேகத்தை குறைக்க வேண்டும் என்ற இலக்கை அல்ல, அவர்கள் உங்களின் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மற்றும் உங்கள் கேமரா போன்ற ஊடுருவல்களுக்குத் தான். இருப்பினும் சில நேரங்களில், நீங்கள் இண்டர்நெட்டில் தேடுதல் நடத்திக்கொண்டிருக்கும் போது வரும், தேவையற்ற லிங்க்-ஐ கிளிக் செய்யும் போது வரும் வைரஸ் உங்கள் போனின் வேகத்தை குறைப்பது நிஜம் தான். எனவே நீங்கள் செல்போன் வெல்ல வேண்டுமா? கார் வெல்ல வேண்டுமா? பணம், பரிசு பெற வேண்டுமா? என தோன்றும் போலியான லிங்க்-களை தவிருங்கள். இதுபோன்று சீனாவில் இருந்து சில லிங்க்குகள், சில சீன ஆப்ஸ்கள் மூலம் பகிரப்படுவதாகவும், அவற்றின் மூலம் உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாகவும் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close