[X] Close
JUST IN
 • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
 • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
 • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
 • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
 • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
 • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
அறிவியல் & தொழில்நுட்பம் 04 Dec, 2017 05:51 PM

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய பொறுப்பு

new-responsibility-for-whatsapp-group-admins

வாட்ஸ்அப்பில் இயங்கும் குரூப்களுக்கு  புதிய  கட்டுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்றைய தலைமுறையினரை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ்அப் செயலிக்கு அடிமையாகவே இருந்து வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்களின் தேவை மற்றும் பாதுகாப்பு கருதி வாட்ஸ்அப் நிறுவனமும் மாதந்தோறும் புதிய அப்டேட்களை செய்து வருகின்றது. இந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளது ‘ரெஸ்ட்ரிக்டெட் குரூப்ஸ்’ செட்டிங்.

வாட்ஸ்அப்பில் இயங்கும் குரூப்களின் அட்மின்களுக்கு இந்த அப்டேட் பெரியதொரு பொறுப்பை தர இருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் குரூப்களின் அட்மின்களின் அனுமதியுடனே அனைத்து தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட உள்ளன. வாட்ஸ்அப் குரூப்களில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் ஆகியவை பல்வேறு பிரச்னைகளை எழுப்பவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இதில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வீடியோக்களால் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற அனைத்து விதமான பிரச்னைகளையும் குறைக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம், ரெஸ்ட்ரிக்டெட் குரூப்ஸ் என்ற புதிய அப்டேட்டை செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் குரூப்களின் அட்மின்களால், அந்த குரூப்களில் பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும், யாருக்கெல்லாம் அதை ஷேர் செய்ய வேண்டும் போன்றவற்றை முடிவு செய்ய முடியும். தேவையற்ற தகவல்களை நீக்கவும் அட்மின்களுக்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

மேலும், இந்த தகவல்களை மற்ற குரூப்களுக்கு அட்மின் நினைத்தால் மட்டுமே பகிர அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடு குறித்த அதிகாரப்பூர்வமாக தகவலை வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல் 2.17.430 வெர்ஷனில் இந்த அப்டேட் இடம் பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close