[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

மூன்று கேமராக்கள் கொண்ட மோட்டோ ஜி5 எஸ் பிளஸ்

new-motog5s-plus-unvelling-tomorow

மோட்டோ ஜி வரிசையில் மோட்டோ ஜி5-க்கு அடுத்து, மூன்றாவது சீரிஸான ஜி5 எஸ் பிளஸ் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா, 3 ஜிபி ரேம் மொபைலில் 32 ஜிபி மெமரியும்; 4 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் 64 ஜிபி இன்பில்ட் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளன. 128 ஜிபி திறன் கொண்ட மெமரி கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் என இரு வகைகளில் இந்த மொபைல் அறிமுகமாகிறது.

பிரத்தியேகமாக அமேசான் ஆன்லைன் தளத்தில் நாளை முற்பகல் 12:00 மணிக்கு விற்பனை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் 1080 தொடுதிரை கொண்ட இந்த மொபைலில், 13 மெகாபிக்சல் கொண்ட இரண்டு லென்ஸ் ரியர் கேமராக்கள், 8 மெகா பிக்ஸல் முன் பக்க ஃப்ளாஷ் கொண்ட கேமரா, முன் பக்க கைரேகை ஸ்கேனர், ஆன்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம், அக்டோ - கோர் (Octa-core) குவால்காம், ஸ்னாப் 620 செயலி, 3000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளன. நாளை இந்த மொபைல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close