[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

உலகின் மிகப்பெரிய தொலைகாட்டி சீனாவில்!

worlds-biggest-radio-telescope-and-first-ever-quantum-satellite-chinas-top-5-scientific-plans-for-20

ஏறக்குறைய சகலகலா வல்லவனாக விளங்கும் சீனாவால், விண்வெளி ஆராய்ச்சியில் தனி முத்திரையை இதுவரை பதிக்கமுடியவில்லை. இதற்காக ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு அதிக நிதியை சீனா ஒதுக்கி வருகிறது. அமெரிக்கா போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய இடத்தை பிடிக்க சீனா களம் இறங்கியுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.

2022-ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. பூமியில் இருந்து அதிக தூரத்துக்கு சமிக்ஞைகளை அனுப்பவும், பெறவும் உலகின் மிகப்பெரிய தொலைகாட்டியை சீனா நிறுவி முடிக்கும் தருவாயில் உள்ளது.

இந்த தொலைகாட்டியின் விட்டம் சுமார் 30 கால்பந்து மைதானங்களுக்கு சமமாக இருக்கும். எடை 10 ஆயிரம் டன்கள். இதன்மூலம் பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் உள்ள கிரகங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பவும், பெறவும் முடியும். இதில் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் எண்ணிக்கையிலான பிரதிபலிக்கும் கண்ணாடிகள் உள்ளன. மொத்த பரப்பு சுமார் 1.6 கிலோ மீட்டர்.

இந்தத் தொலைகாட்டி சீனாவில் ‘குய்ஷூ’ மாகாணத்தில் நிறுவப்படுகிறது. இந்த ராட்சத தொலைகாட்டியின் ரிஃப்ளெக்டர் மட்டும் 500 மீட்டர் அகலமானதாக வடிவமைக்கப்படுகிறது. இந்த தொலைகாட்டியில் 4,450 தகடுகள் பதிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் 11 மீட்டர் நீளம் கொண்டது. இது தயாரித்து முடிக்கப்பட்டால் உலகத்திலேயே மிகப்பெரிய தொலைகாட்டி என்ற பெருமையை சீனா பெற்றுவிடும்.

இதன்மூலம் இடியின்போது அண்டவெளியில் ஏற்படும் சத்தத்தின் அளவைக் கணக்கிட முடியும். மேலும் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் நடமாட்டம் பூமியில் அவ்வப்போது தென்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ரேடியோ தொலைகாட்டி மூலமாக வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டத்தை அறியலாம் எனவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close