[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பூமியை குளிர்விக்க ஆய்வாளர்கள் புதிய முயற்சி..

scientists-say-aerosols-could-cool-the-planet-without-ozone-damage

பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும்நிலையில், அதனைக் குளிர்விக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சூரியனிலிருந்து வெளிவரும் அபாயகரமான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து பூமியின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பாதுகாத்து வருவது ஓசோன் படலம். ஆனால், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு கலந்த புகை மற்றும் பசுமை இல்ல வாயுக்களால் ஓசோன் படலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, பூமியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்டார்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடல் மட்டம் அதிகரிப்பால் கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவநிலையிலும் மாறுபாடுகள் ஏற்பட்டு இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் புதிய முயற்சியாக ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு முன்பு சல்பர் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது கண்டறிந்துள்ள கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close