[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

isro-successfully-tested-cryogenic-engine

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில், ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திரவ இன்ஜின் உந்தும வளாக மையம் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ளது. இங்கு, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டிற்கான உயர்சக்தி திறன் கொண்ட கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 கட்டங்களாக திரவ எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்படும்.

கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி 4-ஆவது கட்ட திரவ எரிபொருள் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிரையோஜெனிக் இன்ஜின் 10 வினாடிகள் இயங்கியது. சோதனையின் அடுத்தகட்டமாக நேற்று சனிக்கிழமை மாலை மகேந்திரகிரி மையத்தில் 5-ஆவது கட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை நடைபெற்றது.

இதில், 25 வினாடிகள் இடைவிடாது இன்ஜின் வெற்றிகரமாக இயங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை நேரில் கண்காணிக்க, இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி வந்திருந்தார். அவருடன் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் சிவன், ஐபிஆர்சி இயக்குனர் ராகேஷ் மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வில் கலந்து கொண்டனர். சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close