[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

மொபைல் பிரியர்களின் கவனம் இனி 'பானசோனிக் எலுகா மார்க் 2' மீது...!

panasonic-launches-the-eluga-mark-2-smartphone

இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்ற பானசோனிக் நிறுவனம் தற்போது ‘பானசோனிக் எலுகா மார்க் 2’ என்ற புதிய மாடல் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கும் பானசோனிக் நிறுவனம் நேற்று பானசோனிக் எலுகா மார்க் 2 என்ற மாடலை ப்ளிப்கார்டில் பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது. ஆட்டோ ஃபோகஸ் தொழிநுட்பத்தில் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா வசதியும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 10.499 ஆகும்.

5.5-அங்குல வடிவத்தில் முழு எச்டி திறனுடன் ‘பானசோனிக் எலுகா மார்க் 2’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 3000மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி தரத்துடன் நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த மாடலில் 3 ஜிபி ராம், 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும் உள்ளது. எலுகா மார்க் 2 அண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ, 1.3 GHz, 64பிட் ஆக்டோகொர் இயங்குதளத்தில் இயங்க கூடியது. ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1 மற்றும் வைஃபை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் நேர்த்தியாக அமைந்துள்ளது. 4 ஜி தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்ட எலுகா மார்க் 2 பிரத்தியேக விற்பனையாக ப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. நவ- 23 முதல் நவ- 25 வரை எஸ்பிஐ கிரிடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்பவருக்கு 10% தள்ளுபடியுடன் ‘பானசோனிக் எலுகா மார்க் 2’ கிடைக்கும் என ப்ளிப்கார்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close