[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ரத்தம் தேவைக்கு புதிய செயலி... சேலம் 10ஆம் வகுப்பு மாணவரின் வடிவமைப்பு

new-app-for-blood-donation

ரத்ததானம் செய்பவர்களையும், ரத்தம் தேவைப்படுவோரையும் ஒருங்கிணைத்து, உடனுக்குடன் ரத்தம் பெறும் விதமாக புதிய செயலி ஒன்றை சேலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் வடிவமைத்துள்ளார்.

பொதுநலன் கருதி செயலி வடிவமைப்பு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பரவலாக்கப்பட்டுதான் வருகிறது. இருப்பினும் அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. குறிப்பாக ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது பாதிக்கப்படுவோரின் குடும்பத்தினரின் செய்வதறியாது படபடப்புக்கு ஆளாகும் நிலை சொல்லில் அடங்காது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு செயலி வடிவம் கொடுத்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாணவன் ரஞ்சித்.

சேலம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த ராஜா-தவமணி தம்பதியின் இளைய மகன் ரஞ்சித் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அவர் உருவாக்கியுள்ள செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் ரத்தம் தேவைப்படுவோர் இவர்களை எளிதில் கண்டறிந்து பயன் பெறலாம். அதே நேரத்தில், தனது செயலியை பயன்படுத்துவதன் மூலம், நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்றும், இதன் மூலம் தேவையற்ற பதற்றம் தவிர்க்கப்படுவதோடு, உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்கும் என்று ரஞ்சித் கூறுகிறார்.

பொதுநலன் கருதி செயலியை உருவாக்கியிருக்கும் 10ஆம் வகுப்பு மாணவனின் முயற்சி பாராட்டப்படத்தக்க ஒன்றாக உள்ளது. இதன் மூலம் உரிய நேரத்தில் ரத்த தானம் கிடைத்து, மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close