[X] Close
JUST IN

இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போனை களமிறக்கும் 'பிளாக் பெர்ரி'..!

blackberry-dtek50-dtek60-launched-in-india

பிரபல மொபைல் மற்றும் மென்பொருள் நிறுவனமான பிளாக்பெர்ரி வரும் திங்கள்கிழமை முதல் இந்தியாவில் புதிய இரண்டு ஆன்ட்ராய்டு மொபைல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் பிளாக்பெர்ரி நிறுவனம் DTEK50, DTEK60 ஆகிய இரு மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. DTEK50 விலை ரூ. 21,990, மற்றும் DTEK60 மாடல் விலை ரூ. 46,990 ஆகும்.

DTEK50 மாடல் போனின் சிறப்பம்சங்கள்

* இந்த ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் டிஸ்பிளே, ஆன்ட்ராய்டு 6.0.1 வெர்சன் மாடலில், 2610 மெகாஹெர்ஸ்ட் பேட்டரி திறனும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* இதன் எடை 135 கி ஆகும்.

* 1.2 ஹட்ஸ் அக்டோ கோர் குயல்காம் ஸ்னப்ட்டாஹன் 617 ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது.

* இதனுடைய ரேம் 3ஜிபி திறனும் ரோம் 16 ஜிபி திறனும் கொண்டது.

* முன்பக்க கேமிரா 8 இன்ச் மெகாபிக்சல், பின்பக்க கேமிரா 13 இன்ச் மெகாபிக்சல் ஆகும்.

DTEK60 மாடல் போனின் சிறப்பம்சங்கள்

* இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்பிளே, 1440 x 2560 பிக்சல் ரெசல்யூசன் இன்-செல் டிஸ்பிளே என அகலமான டிஸ்பிளேயை கொண்டுள்ளது. ஸ்னாப்ட்ராகன் 820 ப்ராசஸசர் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 32 ஜி.பி மெமரி, கைரேகை மூலம் இயங்கும் சென்சார்வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

* இதனுடைய எடை 165 கி ஆகும். மேலும் இது 4G VoLTE தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

* இதன் பேட்டரி திறன் 3,000 mAh திறனுடனும், ஆன்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தினை கொண்டுள்ளது.

* கேமரா பிரியர்களை கவரும் வகையில் பின்பக்க கேமரா 21 இன்ச் மெகாபிக்சல், 8 இன்ச் மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் இரண்டு பிளாஷ் லைட்டுகள் என ஸ்டைலிஷாக வடிவைக்கபட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close