[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கூகுளுக்கு இன்று பிறந்த நாள்.. வயதோ 18.. !

google-celebrates-18th-birthday-with-a-doodle-amid-some-confusion-over-the-correct-date

இணையம் பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் மட்டும் இல்லையென்றால் உலகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலானோர் முக்கிய தேடுபொறியாக கூகுளைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் ஒரு தகவல் தேட, அது குறித்து பல தகவல்கள் தரும் கூகுள் இன்று தனது 18-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாள், முக்கிய நிகழ்வுகள் போன்றவைகளை நமக்கு நினைவூட்டும் விதமாக கூகுளில், கூகுள் டூடுல் அமைக்கப்படும். ஆனால் இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது கூகுள்.

1998-ஆம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இருவரால் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது.

கூகுள் பிறந்த நாள் எப்போது என்பதில் பலருக்கு குழப்பம் ஏற்படலாம். தற்போதைக்கு செப்டம்பர் 27-ந்தேதி தான் கூகுள் பிறந்த நாள் என்று கூறப்பட்டாலும், கடந்த 2006-ஆம் ஆண்டிற்கு முன்னதாக செப்டம்பர் 26-ஆம் தேதியே கூகுளின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close