[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார்?: நீடிக்கிறது குழப்பம்

who-is-next-tamil-nadu-congress-committee-leader

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் யார்..? ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா அனுப்பி 2 வாரங்கள் ஆன நிலையில் காங்கிரஸில் அந்த பதவி யாருக்கு கிடைக்க போகிறது? என பல கேள்விகள் எழுகின்றன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான வேகத்திலேயே பிரதான அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் பணிகளை தொடங்கி விட்டன. ஆளும் கட்சி எதிர்க்கட்சி தேசிய கட்சி என உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை வலுப்படுத்தும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டிருக்க காங்கிரஸ் கட்சியிலோ, மாநிலத் தலைவரே இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 25-ஆம் தேதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். கட்சி மேலிடமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியை ராஜினாமா செய்து இரு வாரங்களாகியும் இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவனே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் டெல்லி தலைமையிடம் சென்று முறையிட்டனர். இந்த நிலையில் இவர் தான் அடுத்த தலைவர் அவர் தான் அடுத்த தலைவர் என யூகங்களும் பரவிய வண்ணம் இருக்கிறது. இதற்கு வலு சேர்ப்பது போல திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார், மாணிக்க தாகூர், செல்லகுமார், விஜயதரணி, தங்கபாலு ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த நிகழ்வுகளும் அரங்கேறின.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கான பதிலை ஈவிகேஎஸ் இளங்கோவனே வழங்குவார் என நினைத்த ஊடகங்களிடமும், அவர் மவுன விரதத்தை கடைபிடிப்பதாக அறிவித்துவிட்டார்.

இதற்கிடையில் கராத்தே தியாகராஜன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். எனினும் அது மரியாதை நிமித்த சந்திப்பே என அவர் விளக்கமளித்துள்ளார்.

கராத்தே தியாகராஜன் சோனியா காந்தியை சந்தித்ததால் அவர் தான் அடுத்த தலைவரோ என்ற பேச்சு தொடங்கி இருக்கிறது. இருந்தாலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார்? எப்போது ? நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கு தலைமையே பதில் அளிக்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close