[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார் 

sasikala-re-entry-party-not-accepted-says-jayakumar

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் உள்ளனர். சசிகலா விரைவில் விடுதலை ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவர் அதிமுகவில் சேர்க்கப்படுவரா? அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக அமைச்சர்கள் பலரும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுக தலைமை எடுக்கும் முடிவை ஆதரிப்பேன் எனவும் அவர் கூறினார். 

இந்நிலையில், சசிகலா தொடர்பான பேச்சுக்குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரி பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சி எடுத்த ஒருமித்த கருத்து என்பது சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் டிடிவி தினகரன் உட்பட யாரையும் சேர்க்கப் போவதில்லை. அதேபோல ஆட்சியில் அவர்கள் தலையிடக் கூடாது. அவர்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. இதை யாரும் தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை. இந்த முடிவு கட்சியால் எடுக்கப்பட்டு, அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close