[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஆர்.டி.ஐ சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா? - ராகுல் காந்தி கேள்வி

government-is-diluting-rti-in-order-to-help-the-corrupt-steal-from-india-rahul-gandhi

ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக ஆர்.டி.ஐ சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் கடந்த 22 ஆம் தேதி நிறைவேறியது. ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை அரசு பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. மாநிலங்களவையில் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகளுடன் ஆதரவால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

     

இந்நிலையில், ஊழல்வாதிகளுக்கு ஏதுவாக ஆர்.டி.ஐ சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறும் கூட்டம் திடீரென மறைந்து போனது விந்தையாக உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close