[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வீணாகப் போன தினகரன் வியூகம் -  5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அமமுக

ttv-dhinakaran-ammk-has-not-played-significant-role-in-lok-sabha-election

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 350 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

        

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக குறிப்பிடப்படும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்தனர். தொகுதிகளை வெற்றி பெறாவிட்டாலும் திமுக, அதிமுகவுக்கு சில இடங்களில் போட்டியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் 10 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் அமமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக, அதிமுக இடையே மட்டும்தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் மூன்றாவது தரப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக அதிக பல இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருக்கையில், அமமுக 10 ஆயிரம் வாக்குகள் என்ற அளவிலேயே பெற்றுள்ளன. சிவகங்கை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் 30 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளனர்.  

        

நிறைய இடங்களில், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உடன் அமமுக போட்டி போட்டு வருகின்றன. கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட  இடங்களில் 4வது இடத்திற்கும், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 5வது இடத்திற்கும் அமமுக தள்ளப்பட்டுள்ளது. கடலூரில் திமுக வேட்பாளர் 1,42,850 வாக்குகளும், பாமக வேட்பாளர் 99,561 வாக்குகளும் பெற அமமுக வேட்பாளர் வெறும் 13,754 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி 7,383, மக்கள் நீதி மய்யம் 3,526 வாக்குகளும் பெற்றன. 

22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கூட அமமுக வேட்பாளர் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. திமுக, அதிமுக இடையே மட்டும்தான் போட்டி. திமுக, அதிமுக உடன் ஒரு இடத்தில்கூட போட்டியில்லை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close