[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

இட ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விட மாட்டோம்: திருமாவளவன்

vck-chief-thiruma-urges-to-increase-reservation-for-dalits-in-panchayat-election

தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 19 சதவிகிதமாக அதிகரிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடமாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மெமோரியல் ஹாலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதன்படி, சென்னை மாநகராட்சி தனித்தொகுதியாக ஆக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 19 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தனித்தொகுதிகள் வழங்கப்படவேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோருக்கு 19 சதவிகித இடஒதுக்கீடு கோரி கடந்த 2006 ஆம் ஆண்டு திருமாவளவன் தொடர்ந்த வழக்கு, 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close