[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

“போலி கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்” - ட்விட்டரில் ராகுல் காந்தி 

trust-yourself-and-the-congress-party-your-hard-work-will-not-go-waste-rahul-gandhi-tweeted

போலியான கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்று தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், போலியான கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று ட்விட்டர் மூலம் தன்னுடைய தொண்டர்களுக்கு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதில், “உங்களையும், காங்கிரஸ் கட்சியையும் நம்புங்கள். உங்களது கடின உழைப்பு வீணாகப் போகாது” என்று அதில் கூறியுள்ளார்.

             

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொண்டர்களுக்கு ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close