[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் - வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு !

lok-sabha-elections-2019-polls-may-be-cancelled-for-tamil-nadu-seat-after-cash-haul-at-dmk-office

கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிக‌ளி‌ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு இம்மாதம் 1 மற்றும் 2ஆ‌ம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் ‌சகோதரி வீட்டிலிருந்‌து 11 ‌கோடியே 48 ‌லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்‌ செய்யப்பட்டது‌. ப‌‌றிமுதல் செய்யப்பட்‌ட பணம் வாக்காளர்களுக்கு‌ கொடுக்க வைத்திருந்ததாக பூ‌‌ஞ்சோலை சீனிவாசன் வருமான வரித்துறையினரிடம் கூறி‌யதாக காவல்துறை ‌தரப்பில் தெரிவிக்கப்ப‌ட்டது. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

            

அதனைத் தொடர்ந்து காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர்,‌ ஆய்வாளர் புகழ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்வ‌து கு‌றி‌த்து நீதிபதி உடன் ஆலோசனை நடத்தினர். அத‌னை‌யடுத்து கதிர் ‌ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழ‌க்குப்பதிவு செ‌ய்யப்பட்டது‌. மே‌‌லும் திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், ‌அவரது சகோதரியி‌ன் கணவர் தமோத‌ரன் ‌ஆகியோர் மீது தலா‌ ‌இரண்டு பிரிவுகளின்‌ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்த தடை விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவினை மேற்கொள்ளும் பட்சத்தில் அது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். 

         

இதற்கு முன்பாக, ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதும், அதன்பின்னர் கிடைத்த டைரி மற்றும் துண்டு சீட்டுகள் மூலம் தேர்தலையே ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close