[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை: பாரிவேந்தர்

no-alliance-with-corruption-parties-parivendhar

ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், நதிநீர் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய தமிழக நதிகளை இணைக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றிற்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சென்னையில் வெள்ளத்தால் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நடப்பு ஆண்டுக்குரிய வீடுகளுக்கான வரி மற்றும் தொழில் வரிகளை முழுமையாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்பன போன்றவை வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் கோவைத் தம்பி செயல் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர், பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close