[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் உள்ள ராணி நகர் பகுதி வாக்குச்சாவடியில் வெடிகுண்டுவீசி தாக்குதல்
  • BREAKING-NEWS குண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன், லாரி கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்; கொழும்பு நகரில் தேடுதல் வேட்டை தீவிரம்
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே 19இல் இடைத்தேர்தல் 

byelection-to-four-remaining-tamil-nadu-constituencies-aravakkurichi-thiruparankundram-ottapidaram-and-sulur-on-19-may-says-election-commission

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தன. நாடாளுமன்றத்  தேர்தலுடன், காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வழக்கு நிலுவையிலுள்ளதால், திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர், சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்தார். அதனால், காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. 

Image result for அதிமுக எம்எல்ஏ கனகராஜ்

காலியாக உள்ள தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த திமுக வேட்பாளரான சரவணன் தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்றார். ஓட்டபிடாரம் தொகுதி தொடர்பான வழக்கையும் கிருஷணசாமி வாபஸ் பெற்றார். வழக்குகள் வாபஸ் பெற்ற நிலையிலும், தேர்தலை நடத்துவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. 

Related image

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7வது கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாளில் இந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியே நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இடைத்தேர்தல் அறிவிப்பு தேதிகள்:-

வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாள் - ஏப்ரல் 22
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்   - ஏப்ரல் 29
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - ஏப்ரல் 30
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் - மே 2
வாக்குப் பதிவு நடைபெறும் நாள்       - மே 19
வாக்கு எண்ணிக்கை                  - மே 23

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close