[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

“தமிழ்மாநில காங்கிரசுக்கு ஆட்டோ சின்னம்” - ஜி.கே.வாசன் மகிழ்ச்சி 

election-commission-give-auto-symbol-for-g-k-vasan-party

அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி.வி.நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் "தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர் திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 39 தொகுதிகளிலும், 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. அதேபோல மக்களவை தொகுதிகளிலும் வெற்றிகண்டது. இந்த தேர்தல்களில் போட்டியிட்டபோது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.

பின்னர் 2001-ல் மூப்பனாரின் மறைந்தபின், அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகாவை 2002-ல் இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்தார். மத்திய அமைச்சராக பதவிவகித்த நிலையில், 2014 காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். காங்கிரசுக்கு சென்ற எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள் மீண்டும் தன்னுடன் திரும்பிவிட்டதால்  சைக்கிள் சின்னத்தையே தங்கள் கட்சிக்கான நிரந்தர சின்னமாக வழங்க தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் 2016-ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்.

இதையடுத்து மக்களவைத் தேர்தலில் மட்டும் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த தமாகாவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. ஆனால் சைக்கிள் சின்னைத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்பது விரிவான கோரிக்கை என்பதால், அதில் அவசரமாக முடிவெடுக்க முடியாது எனக் கூறி ஜூன் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

மக்களின் அவசரத்தேவைக்கு இருப்பது ஆட்டோ எனவும் கடின உழைப்பின் சின்னம் அது எனவும் தமாகா தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோ சின்னம் வெற்றி சின்னம் எனவும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். திங்கள் கிழமையில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் ஜி.கே. வாசன் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close