[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

கோவையில் பி.ஆர்.நடராஜன், மதுரையில் சு.வெங்கடேசன் போட்டி - மார்க்சிஸ்ட் அறிவிப்பு

cpm-candidates-for-madurai-and-coimbatore

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக இன்று அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மற்றும் மதுரை மக்களவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி, கோவையில் முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன், மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்தார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் காவல் கோட்டம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதினை பெற்றவர்.

                     

மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக 20, காங்கிரஸ் 10, விடுதலை சிறுத்தைகள் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1, ஐஜேகே ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : P.R.NatarajanS.VenkatesanCoimbatoreCPMMadurai
Advertisement:
Advertisement:
[X] Close