[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

விசிக கேட்ட மோதிரம் சின்னம் கிடைக்கவில்லை..!

no-mothiram-symbol-for-vck

மோதிரம் சின்னத்தை ஒதுக்க விசிக கோரியிருந்த நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மக்களவைத் தேர்தலில் விசிகவுக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்டப்படி மோதிரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதேசமயம், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மோதிரம் சின்னம் கிடைக்காததால், வேறு சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்க விசிக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த காலங்களில் மெழுகுவர்த்தி மற்றும் நட்சத்திரம் சின்னங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close