[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“ஏன் அவசரப்படுகிறீர்கள்..பொறுத்திருங்கள்” - தினகரன் நிதானம்

ttv-dhinakaran-still-not-open-the-card-about-alliance-in-loksabha-election

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக, பாமக உடன் தான் பேசவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் உறுதியாகியுள்ளன. மேலும் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை களத்தில் உள்ளன. 

         

இந்நிலையில், கூட்டணிக்காக தேமுதிக, பாமக உடன் தான் பேசவில்லை என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஜெயலலிதா படத்தை பேரவையில் வைக்கக் கூடாது என கூறிய விஜயகாந்துடன் கூட்டணிக்கு பேசுகிறார்கள். அன்புமணி, ராமதாஸ் உள்ளிட்ட பலரும் ஜெயலலிதாவை விமர்சித்துள்ளனர். அவர்களுடன் கூட்டணி அமைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அமமுக ஒருபோதும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்காது. மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்” என்றார். 

கூட்டணி குறித்து எப்போது அறிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு, “ஏன் அவசரப்படுகிறீர்கள், பொறுத்திருங்கள். நல்லக் கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில், அநேகமாக 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும். தேர்தலை கைவிடும் எண்ணமில்லை” என்று தினகரன் கூறினார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close