[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருகை..!

piyush-goyal-visit-chennai-today

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்ட போதிலும், பியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வருகிறார்.

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக - பாஜக இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக‌ தேர்தல் பொறுப்‌பாள‌ர் பியூஷ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பாஜக- அதிமுக இடையிலான கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தன. இதனிடையே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகை இன்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டது. அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்ட போதிலும் பியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வர உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பகல் 12.15 மணிக்கு பியூஷ் கோயல் சென்னை வருகிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close