[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

“5 நிமிடம் நேருக்கு நேர் விவாதிக்கலாமா?” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

rahul-gandhi-s-5-minute-dare-for-pm-narendra-modi

தேசிய பாதுகாப்பு, ரஃபேல் விவகாரங்கள் குறித்து நேருக்கு நேர் 5 நிமிடங்கள் விவாதிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு இடங்களில் தங்களது உரையை நிகழ்த்தி வருகிறனர். 

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை நோக்கி சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ராகுல் பேசுகையில், “மோடி ஜி, உங்களுக்கு 56 இன்ச் மார்பு உள்ளதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று உங்களுக்க்கு சவால் விடுகிறேன். 

         

என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க மோடி தயாரா என்று பாஜகவிற்கு சவால் விடுகிறது. அவர் பயப்படுகிறார். அவர் ஒரு கோழை மனிதர். 5 ஆண்டுகளாக அவரை எதிர்த்து வருகிறேன். அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பிரிவினைவாதம் மூலம் நாட்டை ஆள முடியாது என்பதை இப்போது அவர் புரிந்து கொண்டிருப்பார். 

             

மோடி என்ற பிம்பம் முடிந்துவிட்டது. தோல்வி பயம் மோடியின் கண்களில் தெரிகிறது. பேச்சில் இருக்கின்ற அளவு மோடி தைரியமான மனிதர் கிடையாது என்பதை சீனா கண்டுபிடித்துவிட்டது” என்று காட்டமாக கூறினார். இதற்கு முன்பும் ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close