[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மோடி செய்வது மட்டும் தேசத்துரோகம் இல்லையா? - கெஜ்ரிவால் கேள்வி

modji-has-stalled-work-in-delhi-is-that-not-sedition-arvind-kejriwal

பிரதமர் நரேந்திர மோடி செய்வது மட்டும் தேசத்துரோகம் இல்லையா? என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராக முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்தன. 2016ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பாக, டெல்லி போலீசார் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனிடையே கன்னையா குமார் உள்ளிட்டோர் மீதான வழக்கில் டெல்லி போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி டி.ராஜாவின் மகள் அபரஜிதா, ஜேஎன்யு மாணவர் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஷீலா ரஷீத் ஆகியோரின் பெயரும் 1200 பக்க குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றன. இதனால் கன்னையா குமார் விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகின. 

        

ஆனால், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் எப்படி இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதனால், ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகைக்கு அனுமதி அளிப்பது குறித்து சட்ட ஆலோசனை செய்து வருகிறது.

              

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.  “கன்னையா குமார் தேசத்துரோக குற்றத்தை செய்தாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. அதனை சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது. ஆனால், டெல்லியில் பணிகள் செய்வதை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார். அதாவது, குழந்தைகளுக்கான பள்ளிகள், மருத்துவமனைகள், சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை அவர் நிறுத்திவிட்டார். இது தேசத்துரோகம் இல்லையா?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close