[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“ராகுலின் தோல்வியே பிரியங்காவின் அரசியல் நுழைவு” - பாஜக விமர்சனம்

priyanka-appointment-is-congress-admission-of-rahul-failure-bjp

பிரியங்கா காந்தியின் நேரடி அரசியல் பிரவேசத்தால் காங்கிரசில் வாரிசு அரசியல் தொடர்வதாக உத்தரப் பிரதேச பாஜக பொறுப்பாளர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பிரிவு காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்துப் பேசிய உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் ஜே.பி.நட்டா, குடும்ப நிறுவனம் நடத்தும் அரசியல் குறித்து நாட்டு மக்கள் நன்கு‌‌ அறிவார்கள் என்றார். மேலும் பிரியங்கா காந்தியின் அதிகாரப்பூர்வ பிரவேசம் ராகுலின் அரசியல் தோல்வியை காட்டுவதாகவும் விமர்சித்தார். குடும்ப அரசியல் குறித்து ராகுல் காந்தி தனது நிலைபாட்டை விளக்க‌ வேண்டும் என ஜே.ப‌.நட்டா கூறியுள்ளார்.

          

பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “ராகுலின் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதனால் தான், தனது குடும்பத்திடமிருந்து மேலும் ஒருவரை வரவழைத்துள்ளார்கள். மெகா கூட்டணி கட்சிகள் நிராகரித்துவிட்ட நிலையில், தன்னுடைய குடும்ப கூட்டணியை ராகுல் தேர்வு செய்துள்ளார்.

அனைத்து நியமனங்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வருகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கு இடையே உள்ள வித்தியாசம். பாஜகவை பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்” என்றார். 

இதனிடையே, பிரியங்கா காந்தி திறமையானவர் என்றும் அவரி‌ன் அரசியல் பிரவேசத்தால் பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். “எனது சகோதரி திறமையானவர். என்னுடன் சேர்ந்து ‌மக்களுக்கு சேவையாற்ற இருக்கிறார். தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சியால் உத்தரப் பிரதேச மாநிலம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இளைஞர்கள் அறிவார்கள். 

           

அம்மாநில ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. இளைஞர்களின் கனவை, லட்சியத்தை எழுச்சியடையச் செய்ய காங்கிரஸ் இருக்கிறது. தற்போது நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால் பாஜகவினர் சற்று அச்சமடைந்துள்ளனர்” என்றார் ராகுல்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close