[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“நாட்டிற்கு தலைமை தாங்க மம்தாவுக்கு தகுதி உண்டு” - குமாரசாமி  

cm-kumaraswamy-has-said-that-mamata-banerjee-has-all-the-skills-to-lead-the-country

நாட்டை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கான அனைத்து திறமைகளும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.  

Image result for mamata banerjee

கர்நாடக முதல்வர் குமாரசாமி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, மம்தா பானர்ஜி மிகவும் எளிமையானவர், சிறந்த நிர்வாகி என்றும் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை மம்தா சிறந்த முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவரை தேர்வு செய்வது அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Image result for CM Kumaraswamy vs Mamata Banerjee

மேலும் தேர்தல் முடிந்தபின் எதிர்க்கட்சிகள் தங்களின் தலைவரை தேர்வு செய்யும் என்றும் குமாரசாமி தெரிவித்தார். 1977ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்திக்கு எதிரான அலை வீசியதாகவும், அப்போது எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வெற்றி பெற்றன. அதேபோன்ற சூழல் தற்போதும் நிலவுவதாகவும் குமார‌சாமி குறிப்பிட்டுள்ளார். 

Image result for stalin vs rahul

முன்னதாக தமிழகத்தில் கருணாநிதியின் சிலையை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறியிருந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்து தேசிய அரசியலில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வித்திட்டிருந்தது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close