எதற்கும் அஞ்சமாட்டேன் எனவும் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை அதிமுகவில் தான் இருப்பேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை காட்டுப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் உயர்கல்விக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் எனவும், மக்கள் மனதில் இன்னும் எம்.ஜி.ஆர் மறையவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
மேலும், ஏற்கனவே பதவியில் இருந்தபோது கிராமங்களுக்கு செல்லாத ஸ்டாலின் தற்போது கூட்டங்களை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
இரண்டாக பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒன்று சேரவில்லை எனவும், ஆனால் எம்.ஜி.ஆர் மறைவின்போது உடைந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்தவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமதித்த நிகழ்வு திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது எனவும், பல சோதனைகளை கடந்துதான் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார் எனவும் குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அவருக்கு பல கொடுமைகள் நடந்ததாகவும் தெரிவித்தார்.
கோடநாடு சம்பவம் கூலிப்படையினரால் செய்யப்பட்டது எனவும், கோடநாடு பிரச்னையை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன் எனவும் கூறினார். பொங்கல் பரிசு கொடுத்ததை பொறுக்கமுடியாமல் திமுக பொய் வழக்கை ஜோடிப்பதாகவும், கோடநாடு எஸ்டேட்டில் ஆதாரம் இருந்தால் சசிகலா குடும்பத்தினர் எங்களை சும்மா விடுவார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தான் எதற்கும் அஞ்சமாட்டேன் எனவும், கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் இருப்பேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !