[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

தொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர் - செந்தில்பாலாஜி

senthilbalaji-said-the-m-k-stalin-is-the-best-head

தொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர். அந்த இடத்தில் ஸ்டாலினை பார்க்கிறேன் என திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதில் கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வந்திருந்தனர். 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில் பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, “தேர்தல் வந்தால் ஈபிஎஸ் - ஒபிஎஸ் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள். திமுகவுக்கு வாக்களிப்பார்கள். தொண்டர்களை அரவணைப்பவரே சிறந்த தலைவர். அந்த இடத்தில் ஸ்டாலினை பார்க்கிறேன். மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து ஈபிஎஸ் - ஒபிஎஸ் ஆட்சி செய்கிறார்கள். 

கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், நாடாளுமன்றத்தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவேன். என் மனதில் இருந்த இருளை அகற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உதயசூரியன். நான் திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு ஆச்சரியம், வியப்பை ஏற்படுத்தி இருக்கலாம். டிடிவி தினகரன் குற்றச்சாட்டிற்கு நான் பதிலளித்தால் அது அரசியலில் மரபாக இருக்காது. 
தமிழகத்தின் உரிமைக்காக முக ஸ்டாலின் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் என்னை கவர்ந்தது. இதனால் கழகப்பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தேன். தற்போது முடிவெடுத்து என்னை திமுகவில் இணைத்து கொண்டேன்” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close