[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்

minister-of-fisheries-minister-jayakumar-said-that-ttv-is-a-dangerous-man

தான் ஆபத்தானவர் என டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைய உள்ளார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் கரூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்த டிடிவி தினகரன், சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள் என அமமுக தொண்டர்களுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் அந்தக் கடிதத்தில், “நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானதுதான். துரோகத்தை வேரறுக்க தியாகத்தால் அணிவகுப்போம். ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மீண்டும் இணைய  அழைக்கும் துரோக கூட்டத்திற்கு செல்லக்கூடாது. அமமுகவின் எழுச்சியை தடுத்து வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளது. அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் புதிதாக 2கோடி செலவில் கட்டப்பட உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து வந்தவர் எனவும் உண்மையான அதிமுக இரத்தம் உள்ளவர்கள் திமுகவில் இணைய வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

திமுகவில் இணைவது கடலில் கரைக்கும் பெருங்காயம் போல, அதனால் எந்த பயனும் இல்லை, திமுகவை நோக்கி செல்பவர்கள் ஒரு நாள் நட்சத்திரமாக தான் இருக்க முடியும் என குறிப்பிட்டார்.

செந்தில் பாலாஜி தான் சென்றுள்ளார், அவருடன் இருந்த பலர் அதிமுகவில் தான் உள்ளனர்.எனவே அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் தான் ஆபத்தானவர் என டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். உயர்மின் அழுத்தம் எதற்கும் உபயோகப்படாது எனவும் உயர்மின் அழுத்த மின்சாரம் போன்று டிடிவி ஆபத்தானவர் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் அதிமுக 230 வாட்ஸ் மின்சாரம் போன்றது எனவும் அதைத்தான் நாம் வீட்டுக்கு உபயோகிக்கிறோம் எனவும் தெரிவித்தார். டிடிவியுடன் பிரிந்து சென்ற அமமுகவினர் அதிமுகவில் இணைந்தால் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கும் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close