[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து - ஸ்டாலின்

m-k-stalin-wishes-to-soniya-gandhi

மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்திக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக இன்று அதிகாலை டெல்லி புறப்படும் போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியாகாந்திக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சோனியாகாந்தியோடு ஆலோசனை நடத்தப்படுமெனவும் அதைத்தொடர்ந்து நாளை டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்க இருப்பதாகவும் கூறினார். அப்போது மற்ற  மாநில அரசியல் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்தார். அந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால், மேகதாது பிரச்னை குறித்து அவரிடமும் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் கழக ஆட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழிக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து பெற்றுத்தர அடித்தளமிட்ட சோனியா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close