[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

அதிமுக அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் : அமைச்சர் காமராஜ்

minister-kamaraj-speech-against-pala-karuppiah

திருவாரூரில் நடந்த இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘பழ.கருப்பையா நாக்கை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யக் கூடியவர்” என அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக சார்பில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் “இலவசத்தை நம்பாதீர்கள் என சிலர் சொல்கிறார்கள், காசுக்காக படம் நடிப்பது, எடுப்பது அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பாமர மக்கள் தான் எது வேண்டும் எது வேண்டாமென்று சொல்ல வேண்டும். இலவசத் திட்டங்களால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது, கிராமப்புறங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது”என்று கூறினார்.

மேலும் “ பழ.கருப்பையா ஒரு வியாபாரி, நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ.கருப்பையா அதிமுகவில் இருந்தபோது எங்களிடமே பணம் வாங்கி கொண்டு தான் மேடையில் பேசுவார். அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ.கருபாபையா கேட்கிறார். நான் சொல்கிறேன் அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் தான் என மார்தட்டி சொல்வேன்” என்றார். வேணுமென்றால் நாளை நான் நேராக வருகிறேன். இரண்டு பேரும் ஒரே இடத்தில் விவாதிக்க தயாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார் அமைச்சர் காமராஜ். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close