[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

“தனிநபர்கள் மீது அக்கறையோ, எதிர்ப்போ அரசுக்கு இல்லை” அருண் ஜெட்லி

supreme-court-order-on-cbi-row-extremely-positive-development-arun-jaitley

சிபிஐயில் நடைபெறும் பிரச்னை தொடர்பாக எந்தத் தனிநபர் மீதும் அக்கறையோ, எதிர்ப்போ மத்திய அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சிவிசி அனுப்பியுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் உடனடியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

            

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ’சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை, ஓய்வுப் பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும், ’பொறுப்பு இயக்குநர் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது; நிர்வாக விவகாரங்களை மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

           

இந்நிலையில், சிபிஐயில் நடைபெறும் பிரச்னை தொடர்பாக எந்தத் தனிநபர் மீதும் அக்கறையோ, எதிர்ப்போ மத்திய அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான புகார் இரண்டு வாரத்தில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். சிபிஐயின் நற்பெயர், நம்பகத்தன்மை ஆகியவற்றை பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்று கூறியுள்ள ஜெட்லி, அண்மையில் நடந்த சம்பவங்கள் அந்த அமைப்பின் நற்பெயரில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நியாயமான, பாரபட்சமான விசாரணை நடத்தும் என நம்புவதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close