[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சகதி எடுத்துவீசி விட்டு செல்ல கூடாது - மீ டூ குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

union-minister-pon-radhakrishnan-spoke-about-metoo

மீ டூ ஹேஷ்டேக் மூலம் ஆண்கள் மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறுவதால் நாட்டின் தன்மைகள் பாதிக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மீ டூ ஹேஷ்டேக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பெண்கள் ஆண்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்றார். 

“மீ டூ ஹேஷ்டேக் மூலம்  ஆண்கள் மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதன் மூலம் நாட்டின் தன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றசாட்டு குறித்து தவறாக சொல்லப்பட்டு வருகின்றது. பெண்களுக்கு வேலை இடங்களில் பாதுகாப்பு வேண்டும். குற்றச் சாட்டுகளை கூறுபவர்கள் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும். சகதி எடுத்து வீசுபவர்கள் வீசி விட்டு செல்ல கூடாது” என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

           

முன்னதாக இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், “பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் யார் அந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த வேண்டும். வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்” என்றார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close