[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து நீதிபதி எஸ்.ஏ.பாப்டெ விசாரணை நடத்த உள்ளார் என தகவல்
  • BREAKING-NEWS இலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
  • BREAKING-NEWS மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் உள்ள ராணி நகர் பகுதி வாக்குச்சாவடியில் வெடிகுண்டுவீசி தாக்குதல்
  • BREAKING-NEWS குண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன், லாரி கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்; கொழும்பு நகரில் தேடுதல் வேட்டை தீவிரம்
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

எந்தக் கூட்டணிக்கும் தயாராக இருக்கிறாரா அமித் ஷா ? 

bjp-fancies-its-chances-in-t-n

தமிழ்நாட்டில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையையடுத்து, வரும் அக்டோபர் இறுதிக்குள் தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க  பிஜேபி தலைவர் அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014 நடந்த பொதுத் தேர்தல்களில் பிஜேபி கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜெகே, மற்றும் இன்னும் சில கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணி இரண்டு தொகுதிகளையும் வென்றது. ஆனால் இந்தக் கூட்டணி நீண்ட நாள் நிலைக்கவில்லை. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இந்தக் கூட்டணியில் இருந்து முதலில் வெளியேறியது வைகோ தலைமையிலான மதிமுக. இதனையடுத்து படிப்படியாக மற்றக்  கட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

Read Also -> 14 வயதில் தொடங்கிய அரசியல் பயணம் - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை

         

ஆனால் இப்போது தமிழக அரசியல் சூழ்நிலை வேறுமாதிரியாக இருப்பதாக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அவர் "2014-இல் இருந்ததைவிட இப்போது தமிழக அரசியல் களம் மிகவும் வித்தியாசமானது. அதிமுக பொதுசெயளாலர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் அடுத்தடுத்த மறைவுகளால் தமிழகத்தில் வெற்றிடம் உருவாக்கி உள்ளது. ஜூலை மாதம் சென்னையில் நடைப்பெற்ற பாஜக-வின் சக்தி கேந்திர கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் அமித்ஷா தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பணி கிட்டதட்ட முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக பிரதமர் மோடி அவர்களின் நிர்வாக திறமையும், பாஜக அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்லும் பணியை செய்ய வேண்டும் என்று கூறினார்" அவர்.

மேலும் அமித்ஷா அந்தக் கூட்டத்தில் "தமிழகத்தைப் பொருந்தவரை அதிமுக வாக்காளர்கள் கருத்தியல் ரீதியாக பிஜேபி-க்கு எதிரானவர்கள் அல்ல, அதேபோல் திமுக. தலைமையும் பிஜேபி-க்கு எதிரானது அல்ல. நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் எதிர்கட்சி கூட்டணியில் சேறுவதற்கு ஆதரவாக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது" என்று அமித் ஷா சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான்  திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக சார்பில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் வரும் ஆகஸ்டு 30- ஆம் தேதி மாலை- 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் நடக்கிறது. அதில் அமித்ஷா பங்கேற்க இருப்பதாக சில நாட்களாய் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கட்சித் தலைவர் அமித் ஷா கலந்துக்கொள்வாரா இல்லையா என்பது குறித்த தகவல் இன்னும் தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு வந்துச் சேரவில்லை. மேலும் அமித் ஷாவுக்கு பதிலாக பாஜக பிரதிநிதி அனுப்பப்படுவாரா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. விடையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நன்றி: தி இந்து (ஆங்கில நாளிதழ்)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close