[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

இன்று சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா

bjp-president-amith-shah-to-arrive-chennai-today

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.

காலை 11.45 மணிக்கு சென்னை வரும் அமித் ஷா, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கோல்டன் பீச் ரெசார்ட்டில் மதியம் 12.30 மணிக்கு ‌மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் ‌உடனான கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 4.45 மணிக்கு இந்து அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடும் அமித்ஷா, அதனைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 16 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் உரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பாஜக புதுச்சேரி நிர்வாகிகளுடனும், 9.15 மணிக்கு அந்தமான் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அந்தக் கூட்டத்திற்கு பிறகு இரவு 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா டெல்லி புறப்படுகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close