[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

காங்கிரசுக்கு ஓகே சொன்ன திருமா.. திமுகவுக்கு மறைமுக அழுத்தமா..?

vck-leader-thirumavalavan-meets-rahul-gandhi-in-delhi

காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அணியில் இணைய தயார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு உள்ளது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா, சந்திரசேகர் ராவ் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அந்த புதிய அணி காங்கிரஸ், பாஜக இரண்டும் அல்லாத அணியாக அமையவும் வாய்ப்புள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை அவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சென்னை வந்திருந்த சந்திர சேகர் ராவ் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்தார். ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது புதிய அணி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து இருவரும் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், டெல்லிக்கு சென்றுள்ள திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். திருமாவளவன் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் உடன் சென்றுள்ளார். யெச்சூரி உடனான சந்திப்பு பின் திருமாவளவன் பேசுகையில், 3ஆவது அணி அமைந்தால் அது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.

ராகுல் காந்தி உடனான சந்திப்பின் போது, பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அணியில் இணைய தயார் என்று தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது என்று திருமாவளவன் தெரிவித்தார். 

        

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த விவாதங்கள் சில தினங்களாக எழுந்து வரும் நிலையில், திமுக உடன் நெருக்கம் காட்டி வரும் திருமாவளவன் திடீரென ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். சந்திர சேகர் ராவ் உடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை விலக்கிவிட்டு மம்தா உருவாக்கும் அணிக்கு பச்சைக் கொடி காட்டுவது குறித்து ஸ்டாலின் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தகைய சூழ்நிலையில், திருமாவளவன் ராகுல் காந்தியை சந்தித்து வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அல்லாத புதிய அணியை அமைக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் இடம் பெற வேண்டாம் என்று திமுகவுக்கு திருமாவளவன் மறைமுகமாக சமிக்கை கொடுத்துள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளதாக ஸ்டாலினும், திருமாவளவன் என்ன இறுதி முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close