[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கன்னத்தில் தட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்டார் ஆளுநர்

tn-governor-apology-with-women-journalist

பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு அவரை துளைத்து எடுத்தனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பினார். அதற்கு நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிய ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினார். இந்த விவகாரம் குறித்து அந்தப் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டார். “தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையானது அல்ல. என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தாலும் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இது ஒரு தாத்தாவை போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை அது தவறு” என்றும் அந்தச் செய்தியாளார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பலதரப்பில் இருந்தும் ஆளுநரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கேட்டுள்ளார். பெண் செய்தியாளரின் கேள்வியை பாராட்டும் விதமாகவும், எனது பேத்தி போல் நினைத்துதான் கன்னத்தை தட்டியதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளாக தானும் பத்திரிகைதுறையில் இருந்ததாகவும் ஆளுநர் விளக்கம் கொடுத்துள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close