[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வெளியேறியது தெலுங்கு தேசம்: குறைந்தது பாஜக கூட்டணியின் பலம்

tdp-quits-nda-centres-strength-comes-down-in-ls

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், மக்களவையில் உள்ள பாஜக கூட்டணியில் பலம் குறைந்துள்ளது. 

மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி தனியாக 273 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சிவசேனா கட்சிக்கு மக்களவையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். 16 உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்து வந்தது. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு மக்களைவில் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர். சிரோமணி அகாலிதளம் மக்களவையில் 4 உறுப்பினர்களை கொண்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிக்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அப்னா தள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 324 உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வி‌லகியுள்ளதால் தற்போது 308 உறுப்பினர்களாக எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதேபோல், மக்களவையில் பாஜகவை அடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு 48 உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர். மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 34 உறுப்பினர்கள் உள்ளனர். பிஜூ ஜனதா தளத்திற்கு 20 எம்பிக்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 உறுப்பினர்களும் உள்ளனர். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு 11 எம்பிக்கள் மக்களவையில் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 உறுப்பினர்களும், சமாஜ்வாதி கட்சி சார்பில் 7 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சிக்கு 4 உறுப்பினர்களும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 3 உறுப்பினர்களும் மக்களவையில் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close