[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார் டி.என்.சேஷன்: கமல் நெகிழ்ச்சி

kamal-haasan-met-former-cec-tn-seshan-in-chennai

முன்னாள் ‌தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது கட்சியில் சேர்ந்திருப்பேன் என்று கூறியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சேஷனின் வீட்டிற்குச் சென்ற நடிகர் கமல்ஹாசன் அவரை சந்தித்தார். கமல்ஹாசன் தனது கட்சியை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார். அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற தங்களை சந்திக்கலாமா என சேஷனிடம் கேட்டேன். அதற்கு எப்பொழுது வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம் என்று அவர் கூறினார்" என்றார். மேலும், வரும் 21ஆம் தேதி திட்டமிட்டப்படி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரசியலில் இறங்கியுள்ள கமல்ஹாசன் வரும் 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close